2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அணிவகுப்பு மரியாதை...

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தலைமையக பொலிஸ் நிலையg; பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை, இன்று காலை 7 மணியளவில், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையை, வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் சீருடைகள் உட்பட பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் போது, மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மன்னாரில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .