2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

அதிக விலையில் பொருள்கள் விற்பனை: ’நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள உணவுப் பொருள்களின் விலை தொடர்பாக மாவட்டச் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  தற்போதைய முடக்க நிலையில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

சீனியின் விலை 180 ரூபாயை  தாண்டி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், கிராமப் புறக் கடைகளில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும்  மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது எனவும் கூறினார்.

உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பாக மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்,   நடமாடும் வியாபாரிகள் மாவட்டச் செயலகத்தின் அனுமதியை பெற்றிருந்தாலும் கூட அதிக விலையிலேயே மரக்கறி, பழ வகைகள், வெதுப்பக உணவுப் பொருள்கள் ஆகியவற்றை அதிக விலையில் விற்பனை செய்கின்றனர் என்றும் சாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X