2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரியின் விடு​முறையால் சடலங்கள் கிடைக்கத் தாமதம்

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில், நேற்று  (07) உயிரிழந்த மூவரின் சடலங்களையும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து பெற்றுக்கொள்வதில், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி விடுப்பில் இருந்த காரணத்தாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென, பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  (07) காலை உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் வைத்தியசாலைக்கு வந்த உறவினர்கள், அன்று இரவு வரை சட்டவைத்திய அதிகாரியின் வருகைக்காகக் காத்து நின்றனர்.

சட்டவைத்திய அதிகாரி ஒருவர் விடுமுறையில் சென்றால், அவருக்கு மாற்றீடாக பதில் கடமையில் வைத்திய அதிகாரியை வைத்திருக்கவேண்டுமெனக் குறிப்பிட்ட அவர்கள், இவ்வாறான செயற்பாடுகளால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X