2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அதிகாலையில் காட்டுக்குச் சென்றவர் பலி

Freelancer   / 2022 மார்ச் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்சி உயிரிழந்துள்ளார்.

நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு,  மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் மல்லாவி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பிரேத பிரசோதனை மற்றும் பொலிஸ் அறிக்கையின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X