2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அம்பலவன் பொக்கணையில் தேடுதல்

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பாடசாலைக்கு முன்னால், விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இடத்தில், இன்று (24) தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் கனரக வாகனத்தைப் பயன்படுத்தி, விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 

அம்பலவன் பொக்கணையானது இறுதிக்கட்ட யுத்ததத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். இந்த நிலையில், வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பாதுகாப்பான பகுதி என தெரிவித்து, கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .