Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 26 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரி வவுனியா, ஓமந்தை அரச வீட்மைப்பு திட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள, இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக, ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காணிகள் வழங்கப்படடிருந்தன.
சுமார் 700 அரச உத்தியோகத்தர்களுக்கு இவாறு காணிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போதுவரை 65 குடும்பங்களே அங்கு குடியேறியுள்ளன.
இந்நிலையில், “மக்கள் குடியேறாத காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதனால் காட்டு விலங்குகளின் ஆபத்து காணப்படுகின்றன. குடிமனைகளுக்கான வீதிகள் செப்பனிடப்படவில்லை? வீதி மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை” என்றுக் கூறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்கள், அமைதியான முறையில் பாதாதைகளை ஏந்தியாவாறு வீடடுத் திட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நின்றவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இவர்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், சி. சிவமோகன் ஆகியோர், சந்தித்துக் கலந்துரையாடியதுடன் “இது தொடர்பாக வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும்” என, உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago