Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து மடு தட்சனா மருதமடு பாடசாலையில் மேற்கொண்ட குறை நிவர்த்தி நடமாடும் சேவையினூடாக மக்களைக்கு சிரமமற்ற சேவையினை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் பிரச்சினைகளை தாமதம் இன்றி நிவர்த்தி செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த குறை நிவர்த்தி நடமாடும் சேவை, தட்சனா மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வடக்கு மகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
'குறித்த நடமாடும் சேவை பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.எங்களையும் மக்களையும் ஒன்று சேர்த்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஏற்படுகின்ற தாமதங்களையும் குறைத்துள்ளது.
ஒருவர் வந்து தனது பிரச்சினையை எங்களிடம் தெரிவித்தால் அதனை நாங்கள் செயலாளருக்கு அனுப்பி செயலாளர் அது தொடர்பில் உரிய கிராம அலுவலகரினூடாக அதனை அறிந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொணடு அதனை எமக்கு சமர்ப்பிக்க சுமார் இரண்டு மாதங்களாகின்றது.
தாமதத்தினையும், மக்களின் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக நாங்கள் இப்படிப்பட்ட நடமாடும் சேவையினை மேற்கொள்ளுகின்றோம். எங்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படைத்தண்மை ஏற்படுத்தவும் இதனைச் செய்கின்றோம்.
இல்லையென்றால் ஏதோ காரணங்களுக்காக சில விடையங்களை நாங்கள் கிடப்பில் வைத்து விட்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காது சில நேரங்களில் இருக்கின்றோம்.
அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக அனைத்து அலுவலகர்களையும் ஒன்றிணைத்து செயற்படுகின்ற போது இப்படிப்பட்ட விடயங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடிகின்றது. மக்களுக்கு பதில் கூற வேண்டிய ஒரு தேவையை நாங்கள் நிறைவு செய்கின்றோம்.
பின் தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் மன ஏக்கங்களையும் எங்களினால் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையிலே தான் இப்படிப்பட்ட நடமாடும் சேவையானது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதற்காக நாங்கள் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
குறிப்பாக தங்களுக்கு வீட்டு வசதி இல்லை வீடு தேவை என எல்லோரும் கேட்கின்றனர். இது மிகவும் சிக்கலான விடயம். வீடு வழங்குவதற்கான நிதி எங்களிடம் இல்லை.
அரசாங்கம் எதாவது நிதி உதவி தர வேண்டும். அல்லது வெளிநாடு தர வேண்டும். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்போது அதனை நிறுத்தி விட்டார்கள்.
மக்கள் தொடர்ந்து வீடுகள் கேட்கின்ற பொது அதனை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கம் 65 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தருவதாக கூறியுள்ளார்கள். அவ்வாறு ஏற்படின் மக்களின் அந்த பிரச்சினைகளையும் நாங்கள் விரைவிலே தீர்க்க முடியும்.
ஆகவே மக்கள் சில கேல்விகளை எங்களிடம் கேட்கும் போது அதற்கான பதிலை அல்லது தீர்வினை உடனுக்குடன் வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், அதை விட நாளாந்த பிரச்சினைகளான பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள், காணி உறுதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கின்றோம்.
இது மக்களுக்கு நன்மை தரும் என்ற எண்ணத்திலே நாங்கள் யாவரும் சேர்ந்து இந்த நடமாடும் சேவையினை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago