2025 ஜூலை 05, சனிக்கிழமை

அரசியல் கைதிகளின் விடயத்தில் பாராமுகம்

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன்பின்  ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில், 'அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் பின்னர், அரசியல் கைதிகளை விசாரணை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட விசேட நீதிமன்ற நடவடிக்கைகள், அரசியல் கைதிகள் விடயத்தில் திருப்தியளிக்ககூடியவாறு இல்லை.

 குறிப்பாக ஒருவர் மீது, ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போது அவற்றில் குறிப்பிட்ட ஒரு வழக்கு மாத்திரமே விசேட நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் ஏனைய வழக்குகள் வௌ;வேறு நீதிமன்றங்களில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் தமக்கான வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கான செலவுகளை தமது குடும்பத்தவர்களால் செலுத்தமுடியாத சூழல் காணப்படுவதாகவும் சிறைக்கைதிகள் கூறியுள்ளனர். 

அத்துடன், தம்மை பிணையில் அல்லது புனர்வாழ்வளித்தாவது விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே அரசாங்கம், தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை கொள்ளவேண்டும்' என ஸ்ரீஸ்காந்தராசா கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .