2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எதிர்ப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள, அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்த தனியார் காணியை சுவீகரித்து இராணுவத்துக்கு வழங்கும் நோக்குடன், அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு வந்த நிலையில், பொதுமக்கள் அதை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், குறித்த காணியானது, காணி எடுத்தற் சட்டத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இத் தனியார் காணியினை அளவிடுவதில் காணி உரிமையாளர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், பிரதேசசெயலகத்தின் உத்தரவின் பேரிலேயே தாம் அளவீடு செய்வதற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அங்கு ஆர்ப்பாட்டத்திலிருந்த மக்கள் காணியை அளவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நில அளவை பிற்போடப்பட்டது.

மேலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் சார்பில் நில அளவை உத்தியோகத்தருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில், இக்காணி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவேந்தும் இடம் எனவும், தாம் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவால் நில அளவை உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், நில அளவீட்டாளர்களும், ஆர்பாட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .