Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
"ஐக்கிய நாடுகள் சபை, அழுத்தங்களை பிரயோகித்தாலேயே, இலங்கை அரசாங்கம் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக செயற்படும்'' என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பணத்தில், மத்திய சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை, அரசங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஐக்கிய நாடுகள் சபையினால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதெனவும் அது, இறுதி யுத்தத்தின் போது, அதிகளவில் இடம்பெற்றதாகவும், சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவால், விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
"இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஏனைய நல்லிணக்க பொறுமுறைகள் உட்பட, ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றவும், இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது.
"இவ்வாறான நிலையில், அரசாங்கம், ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் நிபந்தனைகளுக்கு இணங்கி, கால அவகாசத்தினையும் பெற்றுள்ள இவ்வேளையில், போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், வடக்கு மாகாணத்துக்கு தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், பாரிய பொய்யொன்றை முக்கிய அமைச்சராக உள்ள ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
"இதற்கும் அப்பால், இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே, தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
"இன்று வடக்கு, கிழக்கில், பாரிய நில மீட்பு போராட்டங்களும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும், இடம்பெற்றுவரும் நிலையில், எதனை சாதித்துவிட்டதாக அரசாங்கம் பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரியவிடயமாகும்.
"எனவே, தெற்கில் ஓர் கதையும் வடக்கில் ஓர் கதையும் பேசும் தென்னிலங்கை அரசியலாளர்களும் இலங்கை அரசாங்கமும், இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நாவின் மனித உரிமைபேரவையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுக்கின்றதா என்பது தொடர்பில், குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஆய்வை மேற்கொண்டு, இலங்கை அரசின் மீது அழுத்தத்தினை பிரயோகிக்கவேண்டும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025