Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்துக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து, இன்று (09) காலை இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் பியசேனகே எதிரிசிங்க ஆகியோரே, இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், தொடர்பாக புஸ்பராணியின் பேத்தி (வயது 5) கூறுகையில்,
அம்மம்மாவுடன் குறித்த ஆண் சண்டைப் பிடித்தப் பின்னர் தடியால் அம்மம்மாவை தாக்கியதாகவும் அதன் பின்னரே இவ்வாறு கயிற்றில் அம்மம்மாவை தொங்கவிட்டதன் பின்னர் தானும் கயிற்றில் தொங்கி சுருக்கிட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக, மகாறம்பைக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago