2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆதரவு தெரிவிக்க வருபவர்களை புகைப்படம் எடுக்கும் படையினர்

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர்.

கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார்.

மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தினமும் சமூக ஆர்வலவர்கள், இளைஞர்கள், அமைப்புக்கள் என பலரும் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவதுடன், பல்வேறு உதவிகளையும் புரிந்து வருகின்றனர். அவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருவோரையே விமான படையினர் புகைப்படம் வீடியோ எடுத்து வருகின்றனார்.

குறித்த விமான படையினரின் முகாம் முகப்பு பகுதியில் இருக்கும் காவலரணில் இருந்தே விமான படையினர் புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .