Editorial / 2018 ஜூன் 23 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கனடியன் வீதி - அளம்பில் பகுதியில், நேற்று (22) காலை விடுதலைப் புலிகளில் ஆயுதம் தேடிய மற்றுமோர் அகழ்வு பணி, தோல்வியில் முடிந்துள்ளது.
கிளிநொச்சி - பூநகரி உதவி பொலிஸ் அதிகாரி சந்தன கொடிதுவக்குக்கு, சிறைக்காவலில் உள்ள முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய, அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். எம். டி. எம். சத்துரங்கவால் முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காலை 9 மணிமுதல் சுமார் 2 மணித்தியாலங்கள் பொலிஸார் இராணுவம் ஆகியோரால் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தேடுதல் நடைபெற்றபோது, எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
31 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
46 minute ago