2025 மே 09, வெள்ளிக்கிழமை

’ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தால் மரணம் மர்மமாக இருந்திருக்காது’

Niroshini   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

ரிஷாட் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால், டயகம சிறுமியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது என, கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் வாழ்வுரிமைச்சங்க இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில, இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  வித்தியாவின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும், ஹிஷாலினியின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும் வெளிக்கொணரப்பட்டிருந்தால், இன்று வித்தியாவின் கொலையாக இருக்கலாம் அல்லது ஹிஷாலினியின் கொலையாக இருக்கலாம் அவை நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.

இவ்வாறான கொடுமைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற பொழுது முறையிடுங்கள் எனத் தெரிவித்த அவர்.  ஒருவர் தான் விரும்பாத ஒரு விடயம் இடம்பெறுகின்றது, அல்லது துன்புறுத்தல் இடம்பெறுகின்றது என உணர்ந்தால் பெண்கள் அமைப்புகளிடம் அல்லது தங்களிடம் இரகசியமான முறையில் முறையிடுங்கள் எனவும் கூறினார்.

அவ்வாறான முறைப்பாட்டின் ஊடாக இரகசியமான முறையில் குற்றவாளியை அடையாளம் கண்டு அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும் எனவும், அவர் கூறினார்.

'ஒரு மரணம் சம்பவிக்கும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னராக துஷ்பிரயோகங்கள் இடம்பெறுமிடத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் உடனடியாக கொண்டு வருவதற்கு சகல மக்களும் விழிப்புணர்வுடன் சட்டத்தை அணுகி நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்' எனவும், வாசுகி வள்ளிபுரம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X