2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளால் ஆபத்து’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - கல்லாறு  குடியேற்ற கிராமத்தித்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில்  ஆட்கள் இல்லாமையால், பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, கல்லாறு கிராம மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர், கல்லாறு பகுதியில் 140 குடும்பங்கள் மீளகுடியேற்றப்பட்டன. அதன்பின்னர், யுத்தம் முடிவடைந்த பிறகு மீண்டும் மேலதிகமாக 100 குடும்பங்கள் மீளக்குடியேறின.

இந்நிலையில், இன்று இப்பகுதியில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், 100க்கும் மேற்பட்ட மக்கள், கல்லாறு பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வௌியேறிய மக்களின் வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால், அந்த வீடுகளில் பல்வேறு சமூகவிரோதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக மர்மநபர்களின் நடமாட்டம், போதைப்பொருள் பாவனை  போன்ற பல செயற்பாடுகள் இடம்பெறுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 936 குடும்பங்கள், காணிகள் இன்றி வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .