Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆவா குழுவின் உளவாளி என, கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் டிசெம்பம் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்குபவரும் அக்குழுவின் உளவாளியும் என்ற சந்தேகத்தின் பேரில், செவ்வாய்க்கிழமையன்று (21) கோப்பாய் பொலிஸாரினால், யாழ். பிரவுன் வீதியைச் சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் (வயது 17) எனும் இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இவ்விளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், அவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே, அவ்விளைஞனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யாழ். மத்திய பஸ் நிலையத்தில், பஸ்ஸுக்காக காத்திருந்த மேற்படி இளைஞன், வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், குறித்த இளைஞன் கடத்தப்படவில்லை எனவும் தாமே கைது செய்ததாகவும் கோப்பாய் பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago