சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 09 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்துக்கான இவ்வாண்டுக்கான 1ஆவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கான இவ்வாண்டுக்கான 1ஆவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (09) இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட் பதியுதின், அமைச்;சர் டி.எம்.சுவாமிநாதன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தவிர ஏனையவர்கள் எவரும் இக்கூட்டத்துக்கு சமூகம் அளிக்கவில்லை.

அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களான கமலேஸ்வரன் புவனேஸ்வரன் தவிர வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாண்டு நடைபெறுகின்ற 1ஆவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இதுவாகவுள்ளபோதும், எவரும் சமுகமளிக்காமை பொதுமக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மீள்குடியேற்றத்தின் பின்னரான முன்னேற்றம் பற்றிய மீளாய்வு, மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago