Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று திங்கட்கிழமை (29) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும், ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த 6 மீனவர்களும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, இலங்கை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர், அவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் பின்னர், இன்று திங்கட்கிழமை (29) குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை, 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago