2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கச்சதீவுக்கும் நெடுந்தீவுக் கடற்பகுதிக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள், நேற்று (06) இரவு, கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என, கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

100க்கும் அதிகமான விசைப்படகுகளுடன் நுழைந்த இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர், அவர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

இரவு வேளைகளில், இந்திய மீனவர்கள் கச்சைதீவுக்கு அண்மித்த நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை வழமையாகக் கொண்டு வருகின்றனர் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X