Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 25 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது, இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை கையாண்டு, அதன் மூலம் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம் எனவும் ஆனால் மேற்குலகம் மறுபடியும் ஒரே தவறை செய்கின்றது எனவும் கூறினார்.
அனைத்து தமிழ்த் தரப்புடனும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி. அதற்குரிய செயற்திட்டங்களை வகுக்காமல், தனியே கூட்டமைப்புடன் அவர்கள் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றும், அவர் கூறினார்.
பெசில் ராஜபக்ஷவை அரசாங்கத்துக்குள் கொண்டு வந்து இருக்கும் செயற்பாடானது, தென்னிலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற அதிர்ச்சிகளை களைவதற்கும் தங்கள் அதிகாரங்களை நீடித்து இரண்டாவது தடவையாகவும் தாங்கள் வெற்றி பெறுவதற்குமான முயற்சியாகவும் இது இருக்கின்றது எனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சித்தாந்தத்தில் இருக்கின்ற இந்த அரசாங்கம் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய ஓர் அரசியலமைப்பை கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், 'ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போதே இந்த நாட்டில் இனப் பிரச்சினை என்று ஒன்றும் இல்லை என்று கூறியவர்கள். அப்படிப்பட்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியலமைப்பை கொண்டு வருவார்களா என்பது சந்தேகமே. ஒரு வேளை கொண்டுவந்தாலும் மாகாண சபை அதிகாரத்தை மலிதாக்கி பெரும்பாண்மை கட்சிகள் அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்கான தேர்தல் முறைகளை மாற்றித்தான் அரசியலமைப்பை கொண்டுவருவார்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago