Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அரசியல்வாதிகள், இனியாவது நாகரீக அரசியலை முன்னெடுக்க வேண்டமென, வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்மாளருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர், மக்களிடம் ஆதரவு கேட்டு வரும்போது, தான் சார்ந்த கட்சியாலோ அல்லது தன்னாலோ முன்னெடுக்கப்பட்ட அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான காரியங்களை முன்னிலைப்படுத்தியோ, தாங்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டால், தங்களால் முன்னெடுக்கப்படவிருக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தியோ பிரசாரங்களை மேற்கோள்ளுங்களெனக் கூறினார்.
இவை இரண்டுமே, கைவசமில்லையெனில், தங்களது தனிப்பட்ட ஆசையை முன்வைத்து அரசியல் பிச்சை கேட்கலாமெனத் தெரிவித்த அவர், தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள தமது சமூகம், மேற்கூறிய விடயங்களை கருத்தில்கொள்ளும் என்பதில் ஐயமில்லையெனவும் கூறினார்.
அரசியல் ரீதியாகவோ, அபிவிருத்தி ரீதியாகவோ செயற்படாத, செயற்பட திரானியற்ற அரசியல்வாதிகளும், அவர்களது எடுபிடிகளும் உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனூடாக, அரசியல் செய்ய முற்படுவது வெட்கக்கேடானதெனவும், அது தமது சமூகத்துக்கு ஆபத்தானதெனவும் கூறினார்.
சுகாதார அமைச்சராக இருந்தபோது, சுகாதாரத்துறையில் ஒப்பந்த மற்றும் வெளிவாரி அடிப்படையில் பணியாற்றிய 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கினேனெனத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் இவ்வாறு நியமனம் வழங்கிய ஒரே ஒரு மாகாணம் வடக்கு மட்டுமே எனவும் கூறினார்.
இத்திட்டத்தில், நிரந்தர நியமனம் பெற்றவர்களின் விவரம் வெளிப்படையானதெனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள தகவலறியும் சட்டத்தினூடாக எந்தவொரு தனிநபரும் நியமனம் பெற்றவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் கூறினார்.
அவ்வாறு பெறும் தகவல்களின் அடிப்படையில் முறைகேடோ ஊழலோ நடைபெற்றிருந்தால், அதற்கான பொறுப்புக்கூறும் கடப்பாடு தனக்குள்ளதெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago