Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில், குற்றச் செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை, தடைய பொருள்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், முன்னாள் போராளி ஒருவரும் பெண்ணொருவர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பளை - இயக்கச்சி பகுதியில், நேற்று (04) வெடிப்பொன்று இடம்பெற்றது. இதில், குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குண்டு - 2, கரும்புலி நாள் போஸ்டர் – 1, அலைபேசி, மடிக்கனிணி உள்ளிட்ட பல பொருள்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரும், அவருடன் வசித்து வந்த பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், முன்னாள் போராளி எனவும் இவர் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அங்கத்தவராகச் செயற்பட்டு வந்ததாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
13 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
21 minute ago