Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்க் ஆனந்த்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி, மன்னார் மாவட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை (23) தொடக்கம் தபால் அட்டை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்;.
தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை, கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் மாவட்டத்தின் ஏனைய மீனவ அமைப்பு ஆகியன இணைந்து இந்த தபாலட்டை போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதனையடுத்து மன்னாரின் பிரதான அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்ற மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், வட மாகாண முதலமைச்சர், கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு 20 ஆயிரம் தபாலட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டவுள்ளன.
மன்னார் மீனவ சமாச அலுவலகத்தில் தபாலட்டை போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாவட்டத்தில் மீனவ அமைப்புகளுக்கு தபாலட்டைகள் வழங்கிவைக்கபட்டதுடன் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையப்பங்கள் சேகரிக்கபட்டன.
இந்நிகழ்வில் மன்னார் மீனவ சமாச தலைவர் என்.எம்.ஆலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் கிளையின் இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ், வங்காலை மீனவ சங்க தலைவர் ஏ.ராஜன், வங்காலை மீனவ சங்க போசகர் அருட்தந்தை ஜெயபாலன், பனங்கட்டு கொட்டு மீனவசங்க முகாமையாளர் கே.சங்கர் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முதற்கட்டமாக கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மன்னாரில் இரண்டாம் கட்டமாக தற்போது நடைபெறுகின்றது. மூன்றாம் கட்டமாக கிளிநோச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago