2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடுக்குளத்தின் 5 வான்கதவுகளும் இன்று (14) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார்.

மேலும் 5 வான்கதவுகளும் பிற்பகல் அளவில் திறந்து விடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

குளத்தின் நீர் மட்டம் 27 அடி 11 அங்குலமாக உயர்ந்துள்ளதை அடுத்தே வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

அக்கராயன்குளம், கல்மடுக்குளம், புதுமுறிப்புக்குளம், குடமுருட்டிக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், பிரமந்தனாறு ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன.

கரியாலை நாகபடுவான்குளத்தின் நீர் மட்டம் 06 அடி 09 அங்குலமாக உயர்ந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X