Freelancer / 2022 ஜூன் 02 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு மாதத்தின் பின்னர் நேற்று 01.06.2022 இரவு 6,600 லீற்றர் மண்ணெண்ணைய் கிடைத்துள்ளது.
இரவு 11.00 மணியளவில் இதை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று 02.06.2022 அதிகாலை 3.00 மணிவரை மக்கள் வரிசையில் நின்று மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் இவ்வாறு காத்திருந்த வேளை வரிசையில் நின்ற மக்களுக்காக இளைஞர் குழு ஒன்றினால் சிற்றுண்டி பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையினை இழக்காதீர்கள் என பொதியில் எழுதப்பட்ட வாசகம் தாங்கிய பையில் சிற்றுண்டிகளை வழங்கியுள்ளார்கள். (R)
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago