2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரால் ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை, இன்று (03) அதிகாலை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வாளர் களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் ஒரு தொகுதி மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த மாத்திரைகள், உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் எனத் தெரிய வந்துள்ளதோடு, இரு பெட்டிகளில் இருந்து 60 ஆயிரம் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட மாத்திரைகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X