Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 மே 13 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி உடைக்கப்பட்ட இடத்தில், இராணுவத்திரின்; காலணித் தடங்களை ஒத்த தடையங்கள் இருப்பது, பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, நேற்று (12) இரவு சேதமாக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (13) காலை, துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அந்த இடத்தைச் சூழ இராணுவம் குவிக்கப்பட்டிருந்தும், நினைவுத்தூபி உடைக்கப்பட்டதும், அவ்வாறு உடைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்திரின்; காலணித் தடங்களை ஒத்த தடையங்கள் இருப்பதும், பல சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதென்றார்.
இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை காட்டுமிராண்டித்தனமாக, உடைத்துச் சேதப்படுத்துகின்றவர்கள், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வைத் தருவார்கள் எனவும், அவர் கேள்விஎழுப்பினார்.
'நீங்கள் எவ்வளவு அட்டூழியங்கள் புரிந்தாலும், எங்களுடைய நடவடிக்கைகள் தொடரும்' எனவும், ரவிகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
4 hours ago