Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ கடிதத்தை புறந்தள்ளி, கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழாவை நடத்தியமை தொடர்பில், ஆறு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, வட மாகாண கல்வி அமைச்சால், பாடசாலையின் அதிபருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.
இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழா, இம்மாத ம்இரண்டாம் திகதி இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்கு, ஒரு பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இதன்பின்னர், வட மாகாண கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கான அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளா் அ. சாந்தசீலன், விழாவை இடைநிறுத்தி அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பிறிதொரு தினத்தில் நடத்துமாறு எழுத்து மூலம் பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தார்.
ஆனால், இதனைக் கருத்திலெடுக்காத பாடசாலை அதிபர், தீர்மானித்தபடி இம்மாதம் இரண்டாம் திகதி விழாவை நடாத்தியிருந்தாா். இந்நிலையிலேயே, நிர்வாக ரீதியாக கல்வி அமைச்சின் செயலாளரின் உத்தரவையும் மீறி பாடசாலை அதிபரால் விழா நடத்தப்பட்டது தொடர்பில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இ. இரவீந்திரன் தெரிவித்தாா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
6 hours ago