Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்கிளாயில் இடம்பெறும் இல்மனைற் மணல் அகழ்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய அரசின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு அழுத்தம் கொடுத்து சிலரிடம் காணிபெறுதலுக்கான ஒப்புதலைப்பெற்றனர். சிலரிடம் ஒப்புதலைப்பெறவில்லை. இவ்வாறாக சுமார் 44 ஏக்கர் காணியை சுவீகரித்து இல்மனைற் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.
இந்தக்காணிகளுக்குரிய மக்கள் பலர் ஏற்கெனவே என்னிடம் முறையிட்டிருந்தனர் இருந்தும் தற்போது குறித்த இடத்தில் தொடக்க முயற்சிகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டிக்காட்டியதையடுத்து அப்பகுதிக்கு கடந்தவாரம் சென்றேன். அங்கு அகழ்வுகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் துவங்கிய இடங்களை பார்வையிட்டு வந்தேன். இந்தப்பகுதியில் மணல் அகழ்வதால் சுற்றுப்புறச்சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
புல்மோட்டைப்பகுதியில் பாரியளவில் இல்மனைற்றுக்கான மணல் அகழ்வு செய்ததனால் ஏற்பட்ட தாக்கம் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் மணல் அகழ்வு செய்த இடங்களுக்கு அருகாமையிலும் உணர முடிகிறது.
கொக்கிளாய் பகுதியில் அகழ்வுகள் நடைபெற்றால் கடற்கரையோரங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகவும் அயலில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இது தொடர்பில் மாகாண சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு தெரியப்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago