Freelancer / 2022 மார்ச் 05 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவரது பூதவுடல், கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.
இந்த நிலையில் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
மனைவியிடம் ஒப்படைக்கப்பட பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன் பிட்டி,விடத்தல் தீவு,ஆண்டாங்குளம்,அடம்பன் போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். (R)







2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago