2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘இல்லத்தின் சொத்துகள் மாற்றக்கூடாது’

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சியில் அமைந்துள்ள மகா தேவா சைவச்சிறுவர் இல்லத்தின் சொத்துகள் எதனையும், இராசநாயகம் அறக்கட்டளை என்ற பெயருக்கு மாற்றக்கூடாது” என, கதிரவேலு (அப்பு) கல்வி நிதியத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று  (31) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கி வந்த குருகுலம் சிறுவர் இல்லம், தற்போது மகா தேவா சைவச்சிறுவர் இல்லமாகப் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இதன் பெயரை மீளவும் மாற்றுவது தொடர்பிலான அவசர பொதுக்கூட்டம், சிறுவர் இல்ல விருந்தினர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

இதையடுத்தே, நேற்று  (31) மாலை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போத, சிறுவர் இல்ல வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பெயர் மாற்றம் செய்து கொள்வதை எதிர்த்தும், கதிரவேல் அப்புஜி அவர்களால் குருகுல வளாகம் தொடர்ந்தும் அதே பெயருடன் இயங்க வேண்டும் அதாவது, குருகுல ஆதார கல்வி நிலையமாகவே அமைய வேண்டும் எனவும் அதன்மூலம் கல்வி, ஆன்மீகம், தொழிற்பயிற்சி அனைத்துத்துறைகளும் பேணப்படவேண்டும் எனவும் குருகுலத்துக்கே சொந்தமான சொத்துகளை எக்காரணம் கொண்டும் இராசநாயகம் அறக்கட்டளை என்ற பெயருக்கு மாற்றக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், மேற்படி சிறுவர் இலலத்தின் பொதுச்சபையைப் பரவலாக்கி வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மேற்படி விடயங்கள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர், உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுக்கும் மகஜர்களை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .