Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 8பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட அதிகாரி மா.சசிக்குமார், புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவல் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்காக எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களைச் சேர்;ந்த 8பேர் வேட்புனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமையிலிருந்து எதிர்வரும் நவம்பர் மாதம்; 5ஆம் திகதி நள்ளிரவு வரை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நவம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறும்.
இந்த வாக்களிப்பில், 2015ஆம் ஆண்டு இளைஞர் கழக அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்கள், தாங்கள் நிரந்தரமாக வசிக்கும் பிரதேச செயலகங்களில் வாக்களிக்க முடியும்' அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago