2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

’இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

நாயாற்றில், தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டுள்ளமை அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தனர்.

நாயாற்றில் எரியூட்டப்பட்ட வாடிகளின் உரிமையாளர்களுக்கு, யாழ்ப்பாண வர்தக சங்கத்தினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (19) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நாயாற்றில், மீனவர்கள் வாடிகள் எரிக்கப்பட்மையைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினர் என்னோடு தொடர்பு கொண்டு, இந்த மக்களுக்காக சிறியளவிலான உணவுப்பொருட்கள் சேகரித்து வைத்துள்ளோம் என்று கூறி அதனை மக்களுக்கு கொடுத்து வைக்குமாறு தெரிவித்தனர். அதற்கமைய இந்த மக்களுக்கான உதவி பொருட்களை எடுத்துவந்து கொடுத்துள்ளோம்.

“மீனவ மக்கள் ஒன்றும் யோசிக்கத் தேவையில்லை. மாகாணசபை உறுப்பினர் ஆகிய நான் மக்களுடன் இருக்கின்றேன். மீனவர்களின் அழிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேருவதற்கான ஒழுங்கு முறை இருக்கின்றது. இந்த அழிவுக்கான நட்டஈடுகள் கிடைப்பதற்கான முயற்சிகளில், நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X