Freelancer / 2022 நவம்பர் 20 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சிங்காரவேலன் செல்வக்குமார்( வயது-48) நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளார்.
இவர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 04 இல் 17 வது கட்டிலில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல் போயுள்ளார் என உறவினர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தரவும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. R
23 minute ago
35 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
46 minute ago
1 hours ago