Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவபிரகாசம் சிவமோகன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இன்றைய தினத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்குச் செல்லாது, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொண்டார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த 3ஆம் திகதி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இம் மக்களுடன் இணைந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் தெரிவிக்கையில், “பல தடவைகள் நாடாளுமன்றில் கதைத்தும் காணிப் பிரச்சினை தொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. எனவே, நாடாளுமன்றத்துக்குச் சென்று எந்தப் பலனுமில்லை.
இந்த வாரமும் இம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படவில்லையெனின் ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய சூழ்நிலை தோன்றும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago