2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உணவகங்களில் விசேட மேற்பார்வை

Princiya Dixci   / 2021 மே 03 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை, இன்று (03) முன்னெடுக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று பரவலடைந்து வரும் நிலையில், நகரில்அமைந்துள்ள உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரப் பிரிவினர்களால் அறிவுறுத்தல்களும் வழங்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வவுனியா உணவகங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று மேற்பார்வை செய்யப்பட்டது.

இதன்போது, ஒவ்வொருவருக்கும் இடையில் சமூக இடைவெளிகள் இறுக்கமாக பேணப்படவேண்டும் என்று உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .