2025 ஜூலை 12, சனிக்கிழமை

உப பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க முயற்சி

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட வயல் நிலங்களில் நீர்த்தன்மை காணப்படுவதன் காரணமாக, இடைப்போகமாக உப பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

“இரணைமடு, கல்மடு ஆகிய குளங்களில் நாலடிக்கு குறைவான நீரே காணப்படுவதன் காரணமாக இக்குளங்களின் கீழ் பயிர்ச்செய்கை சாத்தியமில்லை. அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம் ஆகியவற்றில் தற்போது காலபோக நெற்செய்கை அறுவடை நடைபெறுகின்றது.

எனினும், வயல் நிலங்களில் ஈரத்தன்மை இருப்பதன் காரணமாக உடனடியாக இடைப்போகமாக உப பயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம். மழையுடன் சிறுபோகம் ஆரம்பித்தாலும் தற்போது வயல் நிலங்களில் காணப்படும் ஈரத் தன்மையினைக் கருத்திற்கொண்டு உபபயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட முடியும். குளத்தில் இருந்தும் இவ் உபபயிர்ச் செய்கைக்கு நீர் வழங்க முடியும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .