2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘உர மானியத்தை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை’

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

எந்தவிதக் காலதாமதங்களுமின்றி, விவசாயிகளுக்கான உர மானியத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என, கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 2018, 2019ஆம் ஆண்டு காலபோகப் பயிர்ச்செய்கை உர மானியத்துக்கான பசளை விநியோகப் பட்டியல்கள் எதிர்காலத்தில் தான் தயாரிக்கப்படவுள்ளனவெனத் தெரிவித்த அவர், அதனடிப்படையில் காலபோகச் செய்கைக்கான மதிப்பீடுகள், கமநலசேவை நிலையங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றனவெனவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, அவற்றின் தகவல்கள், விவசாய அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுமெனக் குறிப்பிட்ட அவர், அதனடிப்படையிலேயே, காலபோகச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான உரம் வழங்கப்படவுள்ளதெனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், விவசாயிகளுக்கான உர மானியம், உரிய காலத்தில் வழங்கமுடியுமெனவும், ஏனைய உள்ளீடுகள் அமைச்சுகள் ஊடாக விடுவிக்கும் போது, அவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X