Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் கீழ் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (03) அக்கராயன் நீர்ப்பாசனத் திணைக்கள விடுதியில் கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அக்கராயன்குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு 1186.5 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது நீர் விநியோக திகதியாக மே மாதம் 1ஆம் திகதியும், இறுதி விதைப்பு திகதியாக மே மாதம் 20ஆம் திகதி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குளத்தின் நீரின் அளவைக்கொண்டு இவ்வாண்டு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் மாவட்டத்தில் அதிகூடிய செய்கை மேற்கொள்ளும் குளமாக இது காணப்படுவதனால் நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு ஒத்துழைக்;கமாறு விவசாயிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தூரன், மாவட்ட விவசாய திணைக்களத்தின் பணிப்பபாளர், விதைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025