2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘உரிமைகளை வென்றெடுக்க வேறு வ​ழியில்லை’

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

“நாடாளுமன்றம் ஊடாக, ஜனநாயக வழியில் நமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தற்போது இருக்கின்றோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இதுதான் யதார்த்தம். இதைவிட வேறு வழி நமக்கு இல்லை” என, மன்னார் மறைமாவட்ட கலையருவி அமைப்பின் இயக்குநர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.  

மடு கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் மாணவர் நாடாளுமன்ற முதல் அமர்வு, மடு வலயக்கல்வி அலுவலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (15) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அருட்தந்தை, “தமிழ் மக்கள் சார்பில் நாடாளுமன்றத்துக்கு நாம் அனுப்பும் பிரதிநிதிகள், புத்திஜீவிகளாக கல்விமான்களாக, சுயநலம் அற்றவர்களாக, மக்கள் தொண்டர்களாக இருக்க வேண்டும். ஒருசில அரசியல்வாதிகளின் தவறான கீழ்த்தரமான செயற்பாடுகளால், அரசியல் பற்றிய தவறான கண்ணோட்டமே காணப்படுகின்றது. அதனால், அரசியல் ஒரு சாக்கடை என்ற மனப்பதிவு ஏற்பட்டுள்ளது. அரசியல் என்பது சாக்கடை அல்ல. அது புனிதமானது” என்றார்.   

“மக்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற உன்னதமான மேன்மையான ஓர் அவையே நாடாளுமன்றம். மக்களின் குரலாக ஒலிக்கும் நாடாளுமன்றம் பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தப் நாடாளுமன்றத்துக்கு, படித்தவர்கள் செல்ல வேண்டும். இதன் ஊடாக, தமிழ் மக்களாகிய நாம் நமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .