Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'உறவுகளுக்கு கரம் கொடுப்போம்' அமைப்பின் இணைப்பாளர் வே.மாதவன், முள்ளியவளை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், 2ஆம் வட்டாரத்தில் வசிக்கும் வே.மாதவன், எந்தவொரு சட்ட ரீதியான அழைப்பாணையும் இல்லாது, தொலைபேசி அழைப்பு மூலம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு, கடந்த 20ஆம் திகதி காலை 11.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் மாலை 05 மணிக்கு, அவர் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வேளை. அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தாமல், வேறொரு தனியார் வீட்டுக்கு அழைத்து சென்று, தாங்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் விசேட புலனாய்வு பிரிவு என்று கூறி, அவரிடம் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
தற்போதைய காலச்சூழலில், மக்களுக்கு செய்துவரும் உலருணவு பொதிகள் வழங்கும் சேவைகள், வாழ்வாதார உதவிகள் தொடர்பாகவும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு மற்றும் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம் ஆகியன தொடர்பாகவும் யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் ஒட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமான துண்டுப்பிரசுரம் தொடர்பாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், அவரது குடும்பம், அவரோடு பழகியோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் சுமார் 2 மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணையின் பின்னர், தாங்கள் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும், பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .