Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு, 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகளை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, மாவட்டத்தில் உள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள் காரணமாக, அதிகளவான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு, அந்த உலருணவுப் பொதிகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான நிதி, தமக்கு கிடைக்கவில்லை எனவும், மாவட்டத்தில் உள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கான பட்டியல்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்று வருகின்றன என்றும், கூட்டுவுறவுச் சங்கங்கள் கூறுகின்றன.
மேலும், பொருள்களை வழங்குவதற்கான கூறுவிலை கோரல் தம்மிடம் பெறப்பட்டதாகவும் ஆனால், தற்போது அனைத்து பொருள்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொருள்களை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போது, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கான நிதியை திறைசேரியிடம் கோரியுள்ளதாகப் பதிலளித்தார்.
எனவே, அந்த நிதி கிடைத்ததும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .