Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்ட போதும், விதைப்பினை மேற்கொள்ள நிலத்தினை பண்படுத்துவதற்கு உழவு இயந்திரத்திற்கான எரிபொருள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டானில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லாத நிலையில் உழவு இயந்திரங்களுடன் நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்திருக்கின்றார்கள்.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது விவசாயிகள் எரிபொருளினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
முத்தையன் கட்டு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை தொடங்கப்பட்டு குளத்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் உழவு இயந்திரங்களுக்கு டீசல் இல்லாத நிலையில் விசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
வீதிகளில் நீண்ட வரிசையில் உழவு இயந்திரத்தினை நிறுத்திவைத்துவிட்டு மழையிலும் காத்திருக்கின்றார்கள்.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் முத்தையன் கட்டு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் இல்லாததால் உழவுசெய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேட்டுநில பயிர்செய்கையாளர்கள் மற்றும் உப உணவு பயிர்செய்கையாளர்கள் நெற்செய்கையாளர்கள் என அதிகளவான விவசாயிகள் டீசல் இல்லாத நிலையில் நிலத்தினை பண்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
27 minute ago
54 minute ago