Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டக் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, கடந்த 1,073 நாள்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே, குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து பத்திரிகையாளர்களின் ஒருபங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது, ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள், அவை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது.
“பத்திரிகையின் செயற்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல். பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும்” என தெரிவித்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவின் கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago