Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஜூலை 11 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மறைமாவட்டத்தில் சில நாட்களாக இடம்பெற்றுவரும் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் வன்மையாகக் கண்டிப்பதாக, அவ்வொன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ப. அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
“மன்னார் மறைமாவட்டத்தில் இன, மத ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் சில சூத்திரதாரிகளின் திட்டமிடப்பட்ட செயலுக்காக, அப்பாவி மக்களை குழப்பி, குளிர்காய்ந்து, அரசியல் இலாபம் தேடும் எட்டப்பன் வேலைகளை கைவிட்டு விடுங்கள்.
அத்தோடு, கத்தோலிக்க இறைமக்களுக்கும் வேண்டுகோளொன்றை முன்வைக்கின்றோம். தயவு செய்து வன்முறைகளை கையில் எடுத்துச் செயற்பட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து நிற்கின்றோம்.
சட்டத்தை உங்கள் கையில் எடுக்க வேண்டாம். பொறுமையும் நாவடக்கத்தையும் கடைப்பிடியுங்கள்.குறித்த விடயம் தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளம்ன. காவல்துறையினர், சட்டம், ஒழுங்கு மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளை அல்லது நீதிமன்றக் கட்டளைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள்.
எனவே, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இறைமக்கள் யாவரும் அமைதி காக்கும் படியும், இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை செய்பவர்களை இறைவன் தாமே மனம் திருப்ப வேண்டும் என வேண்டுதல் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியமானது, இவ்வாறான விஷமிகளுடைய திட்டமிட்ட தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளை அடையும் நோக்கில், சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையினைக் குழப்ப எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும்” என உறுதி அளிக்கின்றோம் என அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago