2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஏ- 9 வீதிக்கு 1 மணித்தியாலம் பூட்டு

George   / 2016 ஜூன் 21 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக முறிந்து விழும் நிலையிலிருந்த மரத்தை இ தறித்தமையால், ஏ – 9 வீதியினுடனான போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தடைப்பட்டது.

முறிந்து விழும் நிலையில் இருந்த இந்த மரத்தால் ஏற்படவிருந்த உயிராபத்துக்கள், சொத்து இழப்புக்களை தடுக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், மரத்தை தறித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் ஏ – 9 வீதி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மூடப்பட்டு, மரம் அப்புறப்படுத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .