Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மா மரத்தில் இருந்து வீழுந்த அயல்வீட்டுக்காரரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று, யாழ்ப்பாணம் - அரியாலையில், நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
அரியாலை பகுதியைச் சேர்ந்த, பொன்னுத்துரை சிங்கராஜா (வயது 78) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மா மரத்தில் இருந்து விழுந்த அயல்வீட்டுக்காரரைக் காப்பாற்றி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மேற்படி முதியவர், தன்னால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் அழுது புலம்பி, மயங்கி விழுந்து, வண்டிக்குள்ளேயே உயிரிழந்தாரென, மேற்படி முச்சக்கரவண்டியின் சாரதி தெரிவித்துள்ளார்.
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago