Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
சண்முகம் தவசீலன் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் என இராணுவத்தினரால் எழுத்து மூலமாக உறுதி வழங்கப்பட்ட தமது சொந்தக் காணிகள், ஏழு மாதங்கள் கடந்தும் விடுவிக்கப்படவில்லை என புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில், இராணுவம் வசமுள்ள, விடுவிக்கப்படாத காணியின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த காணிகளை விடுவிக்குமாறு கோரி, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் ஒரு மாதத்துக்கு மேலாக, இராணுவ முகாம் முன்பாக காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, இவ்வாண்டு மார்ச் மாதம் நான்காம் திகதி 7.25 ஏக்கர் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டன.
இநிலையில், மிகுதி காணிகளில் ஒரு தொகுதி மூன்று மாதங்களிலும் இன்னுமொரு தொகுதி காணிகள் ஆறு மாதங்களிலும் விடுவிக்கப்படும் என இராணுவத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய, மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டம் தற்காலிகமாக மக்களால் கைவிடப்பட்டிருந்தது.
இருந்தும் இன்றுடன் ஏழு மாதங்கள் நிறைவுற்ற போதிலும் இராணுவம் தமக்கு வழங்கிய உறுதிமொழியையும் மீறி, இதுவரையில் தமது காணிகளை விடுவிப்பதற்கான எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை என காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாறாக, இராணுவம் தமது காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அழகுபடுத்தும் வேலைகளில் ஈடுபடுவதாகவும் இராணுவ முகாமில் பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவவகையில், தமக்கு உறுதி மொழிகளை வழங்கியவர்கள் விரைவில் காணிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago