Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வவுனியா வாரிக்குட்டியூர் 06ஆம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலேயே அதி உயரத்தை உடைய 27 அடி உயரம் கொண்ட ஐயனார் விக்கிரகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா திங்கட்கிழமை(7) வைபவ ரீதியாக இடம் பெற்றது.
சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, வடக்கு, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரம் ரகு, வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய பரிபாலனசபையினரும், வாரிக்குட்டியூர் கிராம மக்களும் இணைந்து கலந்து கொண்டதோடு சிற்பாசிரியர்களையும் கௌரவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
3 hours ago