2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒன்றரை ஆண்டுகளில் 27 ஆசிரியர்கள் இடமாற்றம்

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலையின் நிலவரம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கையெடுக்கப்படாததன் காரணமாக கடந்த 25 ஆம் திகதி பெற்றோர்களினால் பாடசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்தியும் பாடசாலையின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வது தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை. பாடசாலையில் சிறப்பான முறையில் இடமாற்றம் இடம்பெறவேண்டும். ஒருதலைப்பட்சமான முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எமது பாடசாலையில் தொழில்நுட்பப் பாடம் தொடங்கப்பட்டு அதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வியமைச்சின் 2016.04.12 சுற்றறிக்கையின்படி அனைத்து இடமாற்றங்களும் தங்களின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாதென்று. ஆனால், இடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எமது பாடசாலையில் ஒன்றரை ஆண்டுகளில் 27 இடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சரியாக. 40 ஆசிரியர்கள் உள்ள பாடசாலையில் ஒன்றரை ஆண்டுகளில் 27 ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது எந்தவகையில் நியாயம் என பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,

“முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் ஆசிரிய நெருக்கடி தொடர்பாக விரைவான தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிசெய்வேன். இடமாற்றங்களின்போது இப்பாடசாலைக்கு பொருத்தமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்படும். பாடசாலையில் நிலவும் நெருக்கடிகளுக்கு கல்வியமைச்சின் செயலாளரூடாக நடவடிக்கையெடுக்கப்படும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .